நாட்டுக்கோழி முட்டையை 6 வயது சிறார் முதல் 90 வயது முதியோர் வரை தினமும் ஒரு முட்டையை வேகவைத்து அல்லது பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அதாவது நாட்டுக்கோழி முட்டையானது தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக அதிக அளவு புரோட்டின் நிறைந்த ஒரு சிறந்த அருமருந்தாகும். சாதாரண முட்டையை விட இதில் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது 1 நாட்டுக்கோழி முட்டையானது 4 சாதாரண கோழி முட்டையில் உள்ள ஊட்டச்சத்தினைக் கொண்டுள்ளது.
 |
நாட்டுக்கோழி முட்டை
|
- நாட்டுக்கோழி முட்டையில் வைட்டமின் A, D மற்றும் E அதிகம் உள்ளதால் கண்ணுக்கு மிகவும் நல்லது.
- இதன் வெள்ளைக்கருவில் 11 வகையான மினரல்களும், 3.5 கிராம் புரோட்டினும் நிறைந்துள்ளது.
- இதனை தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்கு வலு கூட்டுகிறது.
- குறிப்பாக நாட்டுக்கோழி முட்டையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்பவர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் குடிப்பது நல்லது. இதனால் உடல் வலிமை பெரும்.
- நாட்டுக்கோழி முட்டையானது இதயத்திற்கு வலு கூடுகிறது. இதனை இதைய பிரச்சனையுடையோர் தாராளமாக உண்ணலாம்.
- இருப்பினும் அனேகர் ஆங்கில மருத்துவத்தை சார்ந்து உள்ளதால் சிறுது நாட்கள் அதனை தவிர்த்து, பின்பு இதனை சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது.
 |
முட்டையின் மஞ்சள் கரு
|
- நாட்டுக்கோழி முட்டை நரம்பு மண்டலத்திற்கு வலு கூட்டுகிறது.
- இதன் மஞ்சள் கருவில் அதிக அலவு கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. இதனால் அநேகர் இதனை தவிர்த்து விடுகின்றனர். ஒரு முட்டையில் கிடைக்கும் முழு பலனை அடைய வேண்டும் என்றால் முழு முட்டையுமே உண்ண வேண்டும்.
- நாட்டுக்கோழி முட்டையை கடையில் வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே நாட்டுக்கோழி ஒன்றை வளர்ப்பது சிறந்தது.
0 Comments