நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நம் நாட்டில் குறிப்பிட்ட காலங்களுக்கு ஏற்ப வளரும் சில பழங்கள் வரிசையாக கொடுக்கப்பட்டு உள்ளன. நம் தேசத்தில் மண்னில் விளையும் இந்த தனித்துவமான பழங்களை குறித்து காண்போம். பழம் சொல்லும் கதை இது!
கொடுக்காய்ப்புளி | மெட்ராஸ் த்ரோன்
விளிம்பிப்பழம் / நட்சத்திர பழம்
இந்த பழத்தை பார்ப்பதற்கு மெழுகு தோல் போன்றும் பச்சை மற்றும் தங்க நிற மஞ்சள் நிறம் கொண்ட ஒரு பழமாக உள்ளது. இந்தியாவின் தென்பகுதிகளில் இந்த பழம் அதிகளவில் விளைகின்றன. இந்த பழத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்று உள்ளது.
நெல்லிக்காய்
உருண்டையாக காணபப்டும் இந்த பழம் நெல்லிக்காய் வகையை சார்ந்தது. பழம் பழுத்தாலும் இதில் புளிப்பு சுவை உடையதாகவே இருக்கிறது. அதாவது கருப்பு திராட்சைப் பழத்தை போன்ற ஒத்த சுவையுடன் இனிமையாக இருக்கும். இந்த பழம் கிழக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் (குறிப்பாக நீலகிரி மலைகளில்) வளர்கிறது.
மங்குஸ்தான்
இந்த பழம் தாய்லாந்தின் தேசிய பழமாக கருதப்படுகிறது. மாம்பழத்தில் இருக்கும் சுவை போன்று இந்த பழம் சுவையை தருகிறது. இந்த பழம் நீலகிரி மலைகள், தெற்கு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் அதிகளவில் வளர்கிறது.
பெர்சிமோன்
இந்த பழம் பார்ப்பதற்கு தக்காளி போன்ற ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய குடியேற்றவாசிகளால் இந்தியாவில் இந்த பழம் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் நீலகிரி மலைப் பகுதி போன்ற இடங்களில் வளர்கிறது.
அம்பரெல்லா
இந்த பழங்களை பல விதமான முறைகளில் சமைத்து அனுபவிக்க முடியும். அதாவது ஒரு சாறாகவும், ஊறுகாயாகவும், பழ காக்டெயில்களில் சுவை கொடுப்பதற்கும் மற்றும் துண்டுகளாக நறுக்கி அதன் மீது உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூளை தூவி உட்கொள்ளலாம். இந்த பழம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் வளர்கிறது.
இந்திய வில்வ பழம்
இந்த பழத்தை புதியதாகவோ அல்லது வெயில் உலர்த்தியோ அல்லது பானமாகவோ செய்து சாப்பிடலாம். அல்சரைக் குறைக்கவும், வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை போக்கவும் இந்த பழம் சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது. இந்த பழம் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் இமயமலையின் மேற்கு பகுதியிலும் வளர்கிறது.
கராண்டாஸ் செர்ரி
கிரான் பெர்ரிகளை என்று அழைக்கும் சமையல் குறிப்புகளில் இந்த பழத்தை பயன்படுத்துவது நல்ல சுவையை தருவதாக் கருதப்படுகிறது. இந்த பழம் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் சிவாலிக் மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நீலகிரி மலைகளில் வளர்கிறது.
சால்டா | யானை ஆப்பிள்
இந்த பழம் அசாம், கொல்கத்தா, பீகார், ஒடிசா மற்றும் குமாவோன் முதல் கர்வால் வரை உள்ள துணை இமயமலைப் பகுதிகளில் வளர்கிறது. இந்த பழம் லேசான இனிப்பு மற்றும் சுவை மிகுந்த அமிலம் போன்றவற்றை கொண்டுள்ளது. பெரும்பாலான உள்ளூர்வாசிகள் யானை ஆப்பிள்களை மதிப்பிடுவது அந்த பழத்தின் உட்புறத்திலிருக்கும் ஜெல்லி போன்ற இதழை வைத்தல்ல. மாறாக, அவற்றின் வெளிப்புற இதழ்கள் வைத்தே மதிப்பிடப்படுகிறது.
பிலிம்பி
இந்த பழத்தில் புளிப்பு, அமிலத்தன்மை மற்றும் சில குறிப்புகளோடு குறிக்கப்படுகின்றன. அதாவது இந்த பழம் நன்கு நறுக்கப்பட்டு ஒரு குறுகிய காலத்திற்கு உப்பு நீரில் ஊற வைக்குமாறு விடப்படுகிறது. அதன் பின்பே சட்னிகள், ஊறுகாய்கள் மற்றும் இதர சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கோவாவில் வளர்கிறது.
பொமலோ
இந்த பழத்திலிருக்கும் கசப்பு மற்றும் அமிலத்தன்மையானது திராட்சைப் பழத்தில் காணப்படும் சுவை போன்றே ஒத்துள்ளது. இந்த பழம் வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் வளர்கிறது.
ஐஸ் ஆப்பிள் / டர்கோலா | சர்க்கரை பனை பழம்
கோடைக்காலத்தில் இந்த பழம் சந்தையில் அதிகளவில் விற்பனைக்கு வருவதை உங்களால் காணமுடியும். உள்ளூர் வாசிகள் இதை பயன்படுத்தி ஒரு புது முறையிலான பானத்தையே தயாரிக்கின்றன. இந்த பழம் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவில் வளர்கிறது.
இந்தியன் ஷெர்பெட் பெர்ரி / ஃபால்சா
இந்த பழத்தை பார்த்தவுடன் அவுரிநெல்லி என்னும் பழம் தான் நினைவுக்கும் வருகிறது. இதில் இது கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த பழம் வளர்கிறது.
ராயன் பழம்
இந்த பழம் சபோடேசே குடும்ப வகையை சேர்ந்தது. மே மாதத்தில் மட்டும் அதாவது ஒரு குறுகிய காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த பழம் மத்திய இந்தியா மற்றும் டெக்கான் தீபகற்பத்தில் வளர்கிறது.
கடைசி வரிகள்
மற்ற தேசங்களுடன் ஒப்பிடும் போது இந்த தொகுப்பில் இடம் பெற்ற பழங்கள் அனைத்தும் சற்று அழகானவையாகவும், வித்தியாசமானவையாகவும், கவர்ச்சியான மற்றும் அரிய பழங்களாகவும் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இந்த பழம் இயற்கை நமக்கு நன்கொடையாக அளித்தாலும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவையாக இருக்கிறது. இது போன்ற ஆரோக்கியமான உணவுகளும் நமக்கு அவசியம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
0 Comments