நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பொன் விதிகள் | TIPS FOR HEALTHY LIFESTYLE IN TAMIL

நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பொன் விதிகள்

வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ முதன்மையான தேவை ஆரோக்கியமான உடல் தான். ஆற்றலுடன் செயல்படவும், பணியில் சுறுசுறுப்புடன் இருக்கவும், தனிப்பட்ட வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் ஆரோக்கியமான உடல் அவசியம். நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பின்வரும் பொன்விதிகளை பின்பற்றுங்கள்.

ஆரோக்கியமான உணவு முறை


ஆரோக்கியமான உணவு முறை

இயற்கை உணவுகளை( தாவரங்கள், விலங்குகள்) உட்கொள்ளுங்கள். அதேநேரம் முறைபாட்டுக்கு உட்பட்ட, ரசாயனங்கள் கலந்த உணவுகளை அறவே தவிருங்கள். பாக்கெட் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், நிறமிகள், பதப்படுத்திகள் போன்ற ரசாயனங்கள் உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சீரான உடற்பயிற்சி


சீரான உடற்பயிற்சி

தினசரி குறைந்தது 20 நிமிடங்கள் நடை பயிற்சி செய்தாலே அது உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்தும். இத்துடன் ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்தால், அது உடற்பயிற்சிகளால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும்.

இயற்கையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்


இயற்கையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்

உடலுக்கு விட்டமின் - டி சத்து கிடைக்க முக்கிய ஆதாரமே சூரிய ஒளி தான், ஆனால், நாம் வெயிலில் செல்வதையும், திறந்தவெளிகளில் இருப்பதையும் தவிர்ப்பதால் தான் பெரும்பாலானோருக்கு விட்டமின் - டி சத்து குறைபாடு உள்ளது. ஆகவே தினசரி கொஞ்ச நேரமாவது வெளியில் உலவுங்கள், இயற்கையுடன் நேரம் செலவிடுங்கள். இது உடல் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும்.

முறையான தூக்கம் அவசியம்


முறையான தூக்கம் அவசியம்

தினசரி இரவில் போதுமான நேரம் நீங்கள் தூங்குவதால் உங்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணரச் செய்யும். போதுமான அளவுக்கு தூக்கம் இல்லையெனில் நீரிழிவு, இதய - ரத்தநாள நோய்கள், உடற்பருமன், மனச்சோர்வு உள்ளிட்ட நாட்பட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்.

மன அழுத்தத்தைக் குறையுங்கள்


மன அழுத்தத்தைக் குறையுங்கள்

ஆபத்து அல்லது நெருக்கடிகள் நேரலாம் என்று மூளை எதிர்பார்க்கும் சூழ்நிலையில் அட்ரினலின், கார்டிசோல் மற்றும் நார்எபினெப்ரின் ஆகிய மூன்று ஹார்மோன்களை உடல் உடனடியாக சுரக்கிறது. இவைதான் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் எற்படுத்துகின்றன. இதனால் தூக்கமின்மை, சீரணக் குறைபாடுகள், எரிச்சலுணர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

மூளையின் ஆற்றலை பராமரியுங்கள்


மூளையின் ஆற்றலை பராமரியுங்கள்

சிந்தனைகளை வளர்க்கும் புத்தகங்கள் படித்தல், புதிய பொழுதுபோக்குகளை கற்றுக் கொள்ளுதல், மூளையில் புதிய இணைப்புகளை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வது உள்ளிட்டவை மூளையின் செயல்திறனையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

அவ்வப்போது ரிலாக்ஸ் பண்ணுங்கள்


அவ்வப்போது ரிலாக்ஸ் பண்ணுங்கள்

மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்வதற்கான உத்திகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆழ்ந்து சுவாசித்தல், தியானம் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் தினசரி செயல்பாடுகளில் ஒன்றாக இப்பயிற்சி இருக்கட்டும். இது தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட உதவும்.

எல்லாவற்றிலும் அளவு வேண்டும்


எல்லாவற்றிலும் அளவு வேண்டும்

மதுவுக்கு அடிமையாதல், புகையிலைப் பழக்கம் போன்றவை மக்களிடையே அதிக அளவில் காணப்படும் பிரச்சனைகளாக உள்ளன. புகையிலை பழக்கம் உடல்நலத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகையில், அதிகமாக மது அருந்துதல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்
பாதிக்கிறது. ஆகவே அளவை மீறக்கூடாது என்பது நினைவிருக்கட்டும்.

ஆரோக்கியமான உறவுகளும் அவசியம்


ஆரோக்கியமான உறவுகளும் அவசியம்

வாழ்க்கைத் துணைவர், குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் உள்ளிட்ட நாம் அன்றாடம் பழகும் அனைவரிடமும் நல்லுறவை பராமரிப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும். நீங்கள் மனதளவில் மகிழ்ச்சியாக உணரும் போது உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

கடைசி வரிகள்



ஆரோக்கியமான வாழ்வியல் முறை என்பது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டியது . கடைசிவரை நம்மை காக்கும் மிக முக்கிய செல்வம் ஆரோக்கியம் தான் .