 |
மாதுளை |
மாதுளம்பழம் நம் அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இத்தகு பழமானது மிகுந்த மருத்துவ குணம் மிக்கது. இதனை அடிக்கடி(குறைந்தது வாரத்தில் 4 நாட்கள்) தொடர்ந்து உண்டு வர பலவிதமான பலன்களை பெறலாம்.
- மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கச்செய்வதோடு மட்டுமல்லாமல் உடலிலுள்ள எலும்புகளுக்கும் வலு கூட்டுகிறது.
- மாதுளம்பழ தோலினைக் கொண்டு பல நாட்கள் ஆராத புண்களையும் எளிதில் குணப்படுத்தலாம்.
- மாதுளம்பழத்தை உண்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நோய்யெதிர்ப்பு சக்தியை பெறலாம்.
 |
மாதுளை |
- மாதுளம் பழம் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
- மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மிக எளிதில் இள நரையிலிருந்து விடுபடலாம்.
- மாதுளம்பழமானது இதயத்திற்கு வலுக் கூட்டுகிறது.
- இது செரிமான கோளாறுகளுக்கும் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- முகப்பருவானது நமது உடலில் உள்ள ஹோர்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினால் உண்டாகிறது. மாதுளம் பழச்சாற்றினைக் கொண்டு முகப்பருக்களை எளிதில் விரட்டி விடலாம்.
1 Comments
Nice...
ReplyDelete