கொய்யாப்பழத்தின் மருத்துவ குறிப்புகள் | GUAVA FRUIT BENEFITS IN TAMIL

கொய்யாப்பழம் கிடைத்தால் விட்டு விடாதீர்கள் ஏனென்றால் கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளன. ஒரு ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி போல ஒரு கொய்யாப்பழத்தில் நான்கு மடங்கு அதிகம் உள்ளது.

GUAVA FRUIT BENEFITS

  • இதைக் கடித்துச் சாப்பிடுவதால் பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல் வயிறு இரைப்பை மண்ணீரல் கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன.
  • உணவிற்குப் பிறகு நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது.
  • பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள் ஈறுகள் உறுதியாகும்.
  • கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை ஆகியவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வயிற்று பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குறிப்புகள் | GUAVA FRUIT BENEFITS IN TAMIL

BENEFITS OF GUAVA LEAVES

  • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.
  • கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
  • கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. இதனால் கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை, இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குறிப்புகள் | GUAVA FRUIT BENEFITS IN TAMIL


GUAVA BENEFITS FOR CHILD

  • கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
  • கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

WHO SHOULD NOT EAT GUAVA FRUIT? || யாரெல்லாம் கொய்யாப் பழங்களை சாப்பிடக்கூடாது?

கொய்யாப்பழத்தின் மருத்துவ குறிப்புகள் | GUAVA FRUIT BENEFITS IN TAMIL


  • பொதுவாக கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. எனவே பத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டாம். ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.
  • வாத நோய் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.
  • கொய்யா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.