2015 - ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 - ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உடற்பயிற்சி முறை அல்லது மூச்சுப் பயிற்சி என்பதையும் தாண்டிய இந்திய கலை வடிவமாக யோகா உள்ளது. நவீன வாழ்வியல் முறையை நாம் அதிகமாக பின்பற்றத் தொடங்கும் போது, நீண்டகால நோய்களும் நம்மை அதிகமாக தாக்குகின்றன. ஆனால், நவீன வாழ்க்கை முறையையும் விட முடியாது, அதே நேரத்தில் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உங்களுக்கான தீர்வாக யோகா உள்ளது. உங்கள் உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிக்க பின்வரும் யோகாசனங்களை செய்யுங்கள்:
விரிக்சாசனம்
விரிக்சாசனம் நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை மேலே தூக்குங்கள். சமநிலையில் நிற்க ஒரு குறிப்பிட்ட புள்ளியை பார்த்தபடி, இரண்டு கைகளையும் ஒன்றாக மேல்நோக்கி உயர்த்தவும். இப்போது ஒரு பாதத்தை எடுத்து அடுத்த காலின் மூட்டின் மீது வைக்கவும். சமநிலையை இழக்காமல் இருக்க கண்களை திறந்து வையுங்கள். இதை அப்படியே மாற்றி மற்ற காலில் செய்யவும். ஒவ்வொரு காலிலும் குறைந்தது ஒரு நிமிடம் என்ற அளவில் நிற்க முடிந்தால், இது பல நன்மைகளை தரும்.
பயன்கள்:
நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறவராக இருந்தால், இந்த ஆசனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்டநேரம் அமர்ந்திருப்பது உங்கள் தோற்றநிலையை பாதித்து முதுகுவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு இந்த ஆசனம் நிவாரணம் அளிக்கும். மேலும், இந்த ஆசனம் செய்வதால் முதுகு தண்டுவடம் வலுப்பெற்று உடலின் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மேம்படும். எல்லாவற்றையும் விட , உங்கள் உடல் மிகவும் வளைந்து கொடுக்கக் கூடியதாக மாறும்.
திரிகோணாசனம்
திரிகோணாசனம் இரண்டு கால்களையும் விரித்து வைத்து, ஒரு கை தரையை தொட இன்னொரு கையை மேல்நோக்கி உயர்த்துங்கள். சமநிலைக்காக கண்களை திறந்து கொண்டே இதைச் செய்ய வேண்டும். காலையில் உண்ட உணவு செரித்தபின் முழு ஆற்றலுடன் இருக்கும் போது இதைச் செய்ய முயற்சியுங்கள்.
பயன்கள் :
ரத்தவோட்டம் அதிகரித்தல், ரத்த அழுத்தத்தை குறைத்தல், உடல்பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பை கரைத்தல் என பல்வேறு நன்மைகளை இந்த ஆசனம் அளிக்கின்றது.
உட்கட்டாசனம்
உட்கட்டாசனம் ஒரு கற்பனையான நாற்காலியில் அமர்ந்திருப்பதை போன்றது இந்த ஆசனம். இந்த நிலையில் 30 முதல் 60 விநாடிகள் நீங்கள் அப்படியே இருக்க வேண்டும். கற்பனையான இருக்கையில் அமர்வது எளிதாக தோன்றினாலும், உண்மையில் ஒரு நிமிடம் முழுவதும் அப்படியே இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். எனினும், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும்போது, அது தாக்குப்பிடிக்கும் நேரத்தை அதிகரிக்கும்.
பயன்கள் :
வெறும் வயிற்றில் இந்த ஆசனத்தை செய்யும்போது, அது இதயத்தின் செயல்பாட்டை வலுப்படுத்துவதுடன் அடிவயிற்று உறுப்புகளை உறுதியாக்கும். மேலும், இது உங்களின் உறுதியை அதிகப்படுத்தி, நுரையீரலின் செயல்திறனையும் மேம்படுத்தும்.
புஜங்காசனம்
புஜங்காசனம் இரண்டு கைகளையும் தரையில் நன்கு ஊன்றிய நிலையில் வயிறு, கால்கள் நிலத்தில் படும்படி இருக்கவும். இந்த தோற்றநிலையில் உங்கள் முழு உடல் எடையையும் தாங்க வேண்டி இருப்பதால், கைகளை நன்கு உறுதியாக ஊன்றிக்கொள்ளுங்கள்.
பயன்கள்:
இதை வெறும் வயிற்றில் செய்யலாம். மாலையில் செய்வதாக இருந்தால், உணவு அருந்தி குறைந்தது நான்கு மணிநேரம் கடந்திருப்பதை உறுதிச் செய்துகொள்ள வேண்டும். வளர்சிதை மாற்றம், சீரணம் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நுரையீரலின் சுவாசிக்கும் திறனையும் அதிகரிக்கின்றது. தொடர்ச்சியாக இதைப் பயிற்சி செய்தால் ஒட்டுமொத்த உடலின் பிட்னசையும் பராமரிக்கலாம் .
சிசுவாசனம்
சிசுவாசனம் முட்டிப்போட்டு, இரண்டு கால்களின் கட்டைவிரல்களும் தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் அமருங்கள். உங்கள் மூட்டுகள் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். கைகளை மேல்நோக்கி உயர்த்தி மூச்சை உள்ளிழுக்கவும். பின், மூச்சை வெளியிடும் போது மார்பு பகுதி முழங்கால் மீது படும்படி சாய்ந்து குனியவும்.
பயன்கள்:
உணவு உண்டபின் 4 முதல் 6 மணிநேரத்துக்குள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இது உடலின் ரத்தவோட்டத்தை சீராக்குவதுடன், சரியான முறையில் சுவாசிக்கவும் உதவுகிறது. இதனால் கவலை, மன அழுத்தம் குறைகின்றது. மன அழுத்தம் மிகுந்த வாழ்வியல் முறை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம் இது. காலையில் சில நிமிடங்கள் இதைப் பயிற்சி செய்தால் தெளிவாக சிந்திக்க உதவும்.
பாதங்குஸ்தாசனம்
பாதங்குஸ்தாசனம் கால்களை நேராக வைத்து உங்கள் கைகளால் கால் கட்டைவிரல்களை தொடும் தோற்றநிலை இது. ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்யும்போது உங்களால் காலை தொடமுடிவதுடன், உடலும் வளைந்து கொடுக்கும் தன்மையை பெறும். காலை வெறும் வயிற்றில் இந்த ஆசனைத்தை செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.
பயன்கள்:
இது உங்கள் கவலையை குறைத்து மனஅமைதியை அளிக்கிறது. இது உங்கள் சீரண சக்தியை மேம்படுத்துவதுடன் அனைத்து வகையான சீரண பிரச்சனைகளையும் சரிசெய்யும்.
தடாசனம்
தடாசனம் பாதங்களை ஊன்றி நிமிர்ந்து நின்று, கைகளை மேல்நோக்கி உயர்த்துங்கள். உங்கள் கைவிரல்களை மெல்ல கோர்த்து, அப்படியே மூச்சை உள்ளிழுத்தபடி குதிகால்களை தூக்க வேண்டும். சில விநாடிகள் சுவாசத்தை நிறுத்தி அப்படியே நிற்கவும். பின், மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். வெறும் வயிற்றில் இல்லை என்றாலும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
பயன்கள்:
இதன் நன்மைகளை கருதி ஆசனங்களின் தாய் என்று இதை அழைக்கின்றனர். இதை முறைப்படி தொடர்ந்து பயிற்சி செய்வதால் மூட்டுகள் வலுப் பெறுகின்றன, தோற்றநிலை மேம்படுகின்றது, உங்கள் சுவாச மண்டலத்தின் செயல்திறன் அதிகரிக்கும். குழந்தைகள் இதைப் பயிற்சி செய்தால் அவர்களின் உயரம் அதிகரிக்கும்.
கடைசி வரிகள்
யோகக் கலையானது உடல், மனம் மற்றும் ஆன்மிகத்துக்கு சிறந்த பயிற்சியாக இந்தியாவில் உருவான கலையாகும். கொரொனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, 2020 - ல் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பலர் யோகா பயிற்சி செய்தும், கற்றும் வருகின்றனர் என்பது ஒரு மகிழ்ச்சிக்குறிய செய்தியாகும்.
0 Comments