ஆயுளை அதிகரிக்கும் சிரிப்பு | LAUGHING INCREASES LIFE SPAN

ஆயுளை அதிகரிக்கும் சிரிப்பு

ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ' உலக சிரிப்பு தினம் ' ஆகக் கொண்டாடப்படுகின்றது. முதன்முதலாக ஜனவரி 11, 1988 - ல் இந்தியாவில் மும்பை நகரில் தான் முதல் உலக சிரிப்பு தினம் ' கொண்டாடப்பட்டது. ஒருவருக்கு சிரிக்க எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அப்படி வாய்விட்டு சிரிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றோம்:

சிரிப்பது நமது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை சிரிப்பு குறைப்பதால், நோயெதிர்ப்பு செல்களும் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் எதிர் அணுக்களும் ஊக்கம் பெற்று செயல்படுகின்றன. இது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

ஆயுளை அதிகரிக்கும் சிரிப்பு

சிரிக்கும் போது ஆற்றல் செலவிடப்படுவதால், தேவையற்ற சர்க்கரை கொழுப்பாக உடலில் சேர்வது தடுக்கப்படுகின்றது. ஒரு நாளில் 10 முதல் 15 நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தால் 40 கலோரி ஆற்றல் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சிரிக்கும் போது உடலில் எண்டார்ஃபின் சுரப்பிகள் தூண்டப்படுகின்றது. இந்த ரசாயனமானது வலியை குறைப்பதுடன் நம்மை ரிலாக்சாகவும் மகிழ்ச்சியாகவும் உணரச் செய்கின்றது.

புற்றுநோய் சிகிச்சையில் இணை சிகிச்சையாக சிரிப்பு சிகிச்சையும் அளிக்கப்படுகின்றது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் சிரிப்பு குறிப்பிடத்தக்க அளவு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆயுளை அதிகரிக்கும் சிரிப்பு

உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து மீளவும், புத்துணர்ச்சி பெறவும் உதவும் சிரிப்பு, கவலையையும் பதற்றத்தையையும் குறைக்கிறது .இதனால் இளமையும் ஆயுளும் அதிகரிக்கின்றது.

நோயெதிர்ப்பில் முக்கிய பங்காற்றும் டி- செல்களை சிரிப்பு தூண்டுகிறது. சிரிப்பால் தூண்டப்படும் டி - செல்கள், நோய்க் காரணிகளை தேடிச் சென்று அழிக்கின்றன.