கிழங்கு வகைகளில் பீட்ரூட்டானது ஒரு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள இரும்பு சத்தானது நமது உடலில் புதியதாக இரத்த அணுக்களை உற்பத்திச் செய்ய பயன்படுகிறது.
பீட்ரூட் கிழங்கானது அல்சரை மிக எளிதில் குணபடுத்துகிறது. இதனை தேனுடன் கலந்து வாரத்தில் நான்கு நாட்கள் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
- பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கிருக்கும் மற்றும் நரம்பு தளர்ச்சி நாளடைவில் சரியாகும்.
- பீட்ரூட் கிழங்கை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயமில்லை. பச்சையாகவே சாப்பிடலாம். இது உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.
- இது அஜீரண பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- பீட்ரூட்டை கொண்டு செய்யப்படும் கசாயமானது மூளைக் காய்ச்சலை சரிசெய்யும் தன்மைக் கொண்டது.
- ஆறாத புண்கள், சொறி சிரங்கு மற்றும் பொடுகு பிரச்சனைகளுக்கு, பீட்ரூட்டை நீரில் கொதிக்க வைத்து அந்த நீருடன் வினிகரைச் சேர்த்து தடவி வர வேண்டும்.
- பீட்ரூட்டில் அதிக கனிமச் சத்து நிறைந்துள்ளதால் இது உடலை வலுவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
- பீட்ரூட் கிழங்கை முடிந்தவரை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இது பலவித இருதய பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
0 Comments