நேர்மறை மனநிலையை வளர்க்க உதவும் பழக்கங்கள் | THE IMPORTANCE AND IMPACT OF POSITIVE THINKING ON HEALTH IN TAMIL
கொரொனா வைரஸ் பற்றி தொடர்ந்து செய்திகளில் படித்தும் பார்த்தும் வருகிற மக்களின் மனங்களில், அது பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்காக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தினர் குறித்த கவலையையும் இது அதிகமாக்கியுள்ளது. கொள்ளைநோய் பரவிவரும் இப்படியான சூழலில், உடல்நலத்துடன் மனநலத்தையும் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். உங்கள் மனதில் கவலைகள் எழும்போது, அவற்றை எதிர்கொள்வதற்கான சில முக்கிய குறிப்புகள் உங்களுக்காக.
செல்லப்பிரானிகளிடம் மகிழ்ச்சியுடன் இருத்தல்
சரியான கோணத்தில் பாருங்கள் நம்மை சுற்றி நேர்மறையான பல விஷயங்கள் நடந்தாலும் எதிர்மறையான, துன்பம் ஏற்படுத்திய விஷயங்களையே மனம் அதிகமாக சிந்திக்கும் இதை மாற்ற முயலுங்கள். இதற்கு நீங்கள் விஷயங்களை நடுநிலையுடன் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கொரொனா வைரசால் எவ்வளவோ உயிரிழப்புகள் மற்றும் பிற இழப்புகள் ஏற்பட்டாலும்,சுற்று சூழல் மாசுபாடு குறைந்துள்ளது, சக மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது நேசத்தை வெளிப்படுத்துவது அதிகரித்துள்ளது போன்ற, அதனால் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களையும் பாருங்கள்.
மனதை ரிலாக்சாக வையுங்கள்
மனதை ரிலாக்சாக வையுங்கள், நீங்கள் கவலையுடனோ எதிர்மறை எண்ணங்களுடனோ விழித்தெழுந்தால், அந்நாளில் எதிர்மறையான நிகழ்வுகளையே கவர்ந்து ஈர்ப்பீர்கள்.
ஆகையால் நேர்மறையான விஷயங்களை நினைக்க முயற்சியுங்கள் அல்லது கை, காலை உதறி லேசாக ஸ்ட்ரெச் பயிற்சிகள் செய்யுங்கள். கொரொனா பாதிப்பு பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். படுக்கச் செல்லும் முன் இசையை கேட்பது, தியானம் செய்வது போன்றவை உங்கள் கவலையை போக்கி மன அமைதியை தரும்.
ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்
உங்களை கவனியுங்கள் நீங்கள் பதற்றமாகவோ கவலையாகவோ உணர்ந்தால், நிதானமாக மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். இந்த எளிய பயிற்சியானது உங்கள் இணைப்பரிவு நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும். இது உங்களை அமைதிப்படுத்தும்.
விழிப்புநிலையை பயிற்சி செய்யுங்கள்
விழிப்புநிலையை பயிற்சி செய்யுங்கள் உங்களை சுற்றியுள்ள விஷயங்களை தெளிவான மனதால் பார்க்கவும், கேட்கவும் சில நிமிடங்கள் செலவிடுங்கள். அது மலர்களாகவோ, மேகங்களாக அல்லது ஒரு பறவையின் ஓசையாகக் கூட இருக்கலாம். எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பிசியான மனதுக்கு இது சற்று ஓய்வளிப்பதுடன், உங்கள் மூளையின் செயல்பாடுகளை சாந்தப்படுத்தி, உங்களை மகிழ்ச்சியாகவும் உணரச் செய்யும்.
நிறைய உதவி செய்யுங்கள்
நிறைய உதவி செய்யுங்கள், பதற்றம் காரணமாக சிலர் பதுக்கத் தொடங்குவார்கள். கொள்ளைநோய் பரவுவதை கேள்விப்பட்டவுடன், மளிகைப் பொருட்களை அவசர அவசரமாக வாங்கிக் குவிப்பார்கள். வேறு சிலரோ, இம்மாதிரியான சூழ்நிலையில் தங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்தும்விதமாக மற்றவர்களுக்கு உதவவும், தங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள். சமூக அக்கறையானது நமது நலனையும் பாதுகாக்கும்.
தியானம் அல்லது பிரார்த்தனை செய்யுங்கள்
தியானம் அல்லது பிரார்த்தனை செய்யுங்கள் ஆன்மிக உணர்வும் இறை நம்பிக்கையும் மனநலத்துக்கு உதவும். குறிப்பாக இது நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிப்பதுடன், கவலைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. கவலையாக நீங்கள் உணரும் போதெல்லாம் தியானம் செய்யுங்கள் அல்லது ஒரு சிறு பிரார்த்தனை செய்யுங்கள்.
மனதை பக்குவப்படுத்துங்கள்
மனதை பக்குவப்படுத்துங்கள் கொரொனா கொள்ளை நோயாலோ அல்லது வேறு எதனாலோ நீங்கள் பதற்றமாக உணர்ந்தால், உங்களை அமைதிப்படுத்த உதவும் செயல்பாடுகளை பட்டியலிடுங்கள். ஒவ்வொரு முறை கவலைகள் உங்களை அலைகழிக்கும் போதும், எதிர்மறை எண்ணங்களை நேர்மறை பழக்கங்களாக மாற்றுங்கள். இப்படி செய்யும்போது, உங்கள் மூளையானது கவலையை எதிர்மறை எண்ணங்களிடம் இருந்து பிரித்து, நேர்மறை எண்ணங்களுடன் தொடர்புபடுத்தி உணரச் செய்யும். இதையே பக்குவப்படுத்தல் என்று அழைக்கப்படுகின்றது. இது மனநலத்தை வலுப்படுத்தும்.
நேர்மறையான எண்ணங்களுடன் இருங்கள்
கடைசி வரிகள், எப்போதும் உங்கள் உடல் நலனுக்கு இணையாக மனநலமும் முக்கியம் என்பதில் தெளிவாக இருங்கள். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல்நலமும் கெடும். உங்கள் நலத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை என்பது நினைவிருக்கட்டும். உங்களின் நலத்தை கவனித்துக் கொள்வதுடன் உங்கள் அன்புக்குரியோர் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
0 Comments